[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது !

police-arrested-a-driver-with-a-sexually-abused-6-years-child-in-tambaram

சென்னை பல்லாவரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் ஓட்டுநர் பாண்டியன்(46) என்பவர், அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபடுள்ளார். 

Image result for சிறுமி பாலியல் வன்கொடுமை

இதனையடுத்து வீட்டிற்கு வந்த அந்த குழந்தை உடல் முழுவதும் வலிப்பதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், சிறுமி கொடுத்த தகவலின் பேரில் பாண்டியனை கண்டு பிடித்து, பொது மக்கள் உதவியுடன் தர்ம அடி கொடுத்து சங்கர் நகர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close