[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

ஆவடி அருகே சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி? - போலீசார் தகவல்

how-child-raped-and-killed-near-chennai-avadi-police-tells-the-facts

ஆவடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது  கழுத்தை கயிற்றால் இறுக்கி முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கும் கொடூர சம்பவம் அனைவரது நெஞ்சையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் மீனாட்சி சுந்தரம் என்ற முன்னாள் ராணுவ வீரரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வீட்டில் விடப்பட்ட சிறுமியை காணவில்லை என தாயார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், சிறுமியினர் உறவினரும் அண்டை வீட்டைச் சேர்ந்தவருமான மீனாட்சி சுந்தரத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

       

இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர். அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை கொலை செய்துவிட்டு கழிவறையில் உள்ள வாலியில் சாக்கு மூட்டையில் அவர் கட்டி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, மீனாட்சி சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் சடலத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொலை குறித்து பேசிய போலீசார், “சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மீனாட்சிசுந்தரம், தனது வீட்டுக்கு அவரை அழைத்து வந்துள்ளார். அப்போது, அவரது மனைவி மற்றொரு அறையில் இருந்து உள்ளார். பின்னர், அவர் தனது படுக்கை அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது, சிறுமி சத்தம் போட்டு அலறி உள்ளார். இதனையடுத்து, யாராவது வந்து விடுவார்களோ என பயந்த மீனாட்சிசுந்தரம் வீட்டில் கிடந்த கயிற்றை எடுத்து சிறுமியின் கழுத்தில் போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். 

                     

இதனையடுத்து, அவளது உடலை அரிசி கோணிப்பையில் வைத்து அவரது வீட்டு பாத்ரூமில் மறைத்து வைத்துள்ளார். வெளியில் சென்று வீடு திரும்பிய சிறுமியின் தாய், தனது மகளை காணவில்லை என கூறி மீனாட்சி சுந்தரம் வீடு வந்து உள்ளார். அப்போது அவர், வெளியில் தான் இருப்பாள் தேடுங்கள் என கூறி அனுப்பி உள்ளார். வீட்டுக்கு வெளியே பல்வேறு இடங்களில் தேடி கொண்டிருந்தார். அப்போது மீனாட்சிசுந்தரம் சிறுமியின் உடலை கோணிப்பையுடன், ராஜேந்திரன் வீட்டுக்கு பின்புறமாக எடுத்து சென்று அவரது கழிவறையில் மறைத்து வைத்துள்ளார். அவரும் பொதுமக்களுடன் சேர்ந்து சிறுமியை தேடி உள்ளார். 

மேலும், சிறுமியின் தாய் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் சிறுமியின் வீட்டுக்குள் வந்து தேடிய போது அவரது சடலம் கழிவறையில் கோணிப்பையுடன் தண்ணீர் டப்பில் இருந்தது தெரியவந்தது.  மேலும், போலீசார் பினாயில் வாடை வந்ததை அடுத்து மீனாட்சிசுந்தரம் வீட்டை சோதனை செய்தனர். 

அப்போது அவரது படுக்கை அறையில் சிறுமியின் ஒரு கம்மல், கண்ணாடி வளையல்கள் உடைந்து கிடந்தது தெரியவந்தது. இதோடு மட்டுமில்லாமல் அவரது வீட்டு ஜன்னல் ஸ்கீரினில் ரத்த கரை படிந்து இருந்தது. மேலும், அவர் குழந்தையை கொன்று விட்டு பாத்ரூமில் கழுவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பாத்ரூம், வீட்டு படுக்கை அறை உள்ள சில இடங்களில் படிந்த ரத்தக்கறையை பினாயில் ஊற்றி கழுவி உள்ளார்” எனத் தெரிவித்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close