[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ரவுடிகள், வங்கிக் கொள்ளையர்களை என்கவுன்டர் செய்த திரிபாதி - பின்னணி என்ன?

tn-dgp-designate-tripathi-ips-background

அடுத்த காவல்துறை இயக்குநர் பட்டியலில் திரிபாதி பெயர் முன்னிலையில் இருக்கும் நிலையில், இவரது பின்னணி குறித்து தெரிந்துகொள்வோம். 

காவலர் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக உள்ள திரிபாதி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‌கழ‌த்தில் பட்‌டப்படிப்பை முடித்து, பின்னர் முனைவர் பட்டம் பெற்று, பேராசிரி‌யரானார். 1983ஆம் ஆண்டு சிவில் ‌சர்வீஸ் தேர்வை எழுதத் தொடங்கிய திரிபாதி, ‌1985ஆம் ஆண்டு தனது மூன்றாவது முயற்சியில் ஐபிஎஸ் அதிகாரியானார். முதல் முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பே‌ற்ற திரிபாதி, பல ‌நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து மக்களிடையே பிரபலமானார். குடிசைகளைத் தத்தெடுப்பது, புகார் பெட்டிகள் அமைப்பது என பல நல்ல திட்டங்களும் அதில் அடங்கும். 

இதுமட்டுமின்றி, திரிபாதிக்கு மற்றொரு கூடுதல் சிறப்பும் உண்டு. இரண்டு சர்வதேச விருதுகளை பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவ‌ர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்திற்கான காமன்வெல்த் சங்கம்,‌ 'Innovation in Governance' என்ற தலைப்பில் திரிபாதிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கியது. வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச காவல்துறைத் தலைவர்கள் சங்கத்தின் சமூக காவல் விருதும் திரிபாதிக்கு கிடைத்துள்ளது. பிரதமர் விருதை வாங்கிய முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமையும் இவரையேச் சாரும். 

தனது 30 வருட காவல் பணியில்‌ தென்மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி என பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார், திரிபாதி. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணிய‌ற்றிய திரிபாதி, 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார்‌. ‌பிரபல ரவுடி வீரமணி‌, வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டது இவரின் பதவி காலத்தில் தான். 

கொடூரர்களை ஒடுக்க இரும்புக்கரத்தை பயன்படுத்திய அதே நேரத்தில், குற்றம் புரிந்தோர் மனம் திருந்த நல்வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். திரிபாதி சிறைத்துறை தலைவராக இருந்தபோது, சிறைவாசிகளின் ‌‌வாழ்வை மேம்படுத்தி, சமூக அந்தஸ்தைப் பெற்றுத்தர பல ‌நல்ல திட்டங்‌களை செயல்படுத்தியுள்ளார். அதற்கு‌ உதாரணமாக சிறைச்சாலைகளில் சமூக கல்லூரியை தொடங்கி‌ சிறைவாசிகளுக்கு கல்வி வழங்கியது, வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது, சிறைக் கைதிகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளிட்டவை இன்றளவும்‌ பா‌ராட்டப்படுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close