[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பைக்கில் வந்து ஹெல்மெட் திருடிய நபர் - சிசிடிவி காட்சி

a-person-come-bike-and-theft-helmet-in-erode

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தலைக்கவசத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் அரியப்பம்பாளையம் அருகே தனியார் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இந்தச் சாலையில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் ஒரு ஹெல்மெட் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். 

தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த ஹெல்மெட்டை எடுப்பதற்காக அப்பகுதியில் யாரேனும் உள்ளனரா எனப் பார்த்தார். பின்னர் ஸ்கூட்டரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டார். 

இந்தக் காட்சி தனியார் இருசக்கர வாகன ஷோரூம் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close