[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

சென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை ?

100-kg-cannabis-seized-in-chennai

சென்னை பரங்கிமலையில் சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வாகனத்தில் பதுக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை கிண்டி அருகே உள்ள பட் ரோடு சாலையில் நேற்று முன்தினம் கன்டோன்மென்ட்டிற்கு சொந்தமான வாகன நிறுத்தும் இடத்தில் டாட்டா 407 என்ற சரக்கு வாகனம் சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பரங்கிமலை காவல்நிலைய உதவி பெண் ஆய்வாளர் வாகனத்தை தணிக்கை செய்தார், அப்போது வாகனத்தில் எவ்வித பொருட்களும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை காவல் ஆய்வாளர் மீண்டும் அந்த வாகனத்தை அதே இடத்தில் சோதனையிட்டார். அப்போது, வாகனத்தின் பின்புறமும். வெளிப்புறமும் மாற்றம் தெரிந்தும் கஞ்சா வாசனையும் வந்துள்ளது. இதனால் வாகனத்தில் வேறுபட்டிருந்த இடத்தின் மேற்கூரையை உடைத்து சோதனை செய்ததில், சுமார் 100 கிலோவிற்கு மேலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை அந்த வாகனத்தின் மேற்கூரையில் இருந்து கண்டுபிடிக்கபட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

Image result for கஞ்சா விற்பனை

இதனிடையே அந்த வாகனத்தைக் கைப்பற்றிய பரங்கிமலை காவல்துறையினர், சுமார் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார் என்ற விவரம் தெரியாததால்,பரங்கிமலை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களின் சந்தை மதிப்பு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

போதைப் பொருள் ஒழிப்பு இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக போதைப் பொருள் பற்றிய கருத்தரங்கம், துண்டு பிரச்சுரம் வினியோகித்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போதைப் பொருள் நுண்பிரிவு போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே குறிப்பாக சென்னையில் பெரும்பாலன இடங்களில் போக்குவரத்து காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் சூழலில் எப்படி கஞ்சா போன்ற போதை பொருள் எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது. மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை காவல்துறையினர் தடுக்க தவறியதாக குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close