[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

போராடி வெற்றி கண்ட திருநங்கைகள்.. தேர்வெழுத நீதிமன்றம் அனுமதி..!

chennai-high-court-allow-transgender-to-write-exams

இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 3 திருநங்கைகளை தேர்வு எழுத அனுமதிக்கும்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான 2 ஆயிரத்து 465 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில் வயது வரம்பை பொறுத்தவரை பொது பிரிவினருக்கு 24 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் ஆகியோருக்கு 26 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 29 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினருக்கு 45 வயது என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அட இதையும் படிக்கலாமே.. திருநங்கை நளினா பிரசிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து

திருநங்கைகள் சீர்மரபினர் பிரிவில் வருவதால் 26 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே திருநங்கைகளுக்கான வயதுவரம்பை 45-ஆக உயர்த்தி புதிய அறிவிப்பாணை வெளியிடக்கோரி  திருநங்கைகளான கோவில்பட்டியை சேர்ந்த தேன்மொழி(29), சாரதா(29), சென்னையை சேர்ந்த தீபிகா(27) ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் மூவரும் அந்த தேர்விற்கு விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிப்பட்டவர்கள் ஆவார்கள். 

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மூவரும் மீண்டும் விண்ணப்பித்து ஜூலை 14-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கும்படி சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு இடைக்கால உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். மேலும், எந்த அடிப்படையில் இவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close