[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

காவல்துறையின் அலட்சியத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

the-young-man-suicide-by-police-negligence-in-chennai

தாம்பரம் அருகே தன்னை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்தவர் விசுவநாதன்(29). இவர் நேற்று முன் தினம் மதுபோதையில் சேலையூர் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள டாட்டூ வரையும் கடைக்கு சென்று டாட்டூ போடும்படி கூறியுள்ளார். அதற்கு கடைக்காரர்கள் மறுக்கவே ஆத்திரமடைந்த விசுவநாதன் கடையில் உள்ள பொருட்களை தள்ளிவிட்டு தகராறில் ஈடுபட்டு, கடையை சேதப்படுத்தி உள்ளார். இதனால் பணியாளர் ஸ்ரீதர் கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்ட கடைக்கு வரும் படி அழைத்திருக்கிறார். பின்னர் உரிமையாளர் மதன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேருடன் வந்து விசுவநாதனை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான விசுவநாதன் சேலையூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தன்னை தாக்கிய ஏழு பேர் நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை பெற்று விசுவநாதனை தாக்கியவர்களை கைது செய்யாமல், அவரை இழிவாக பேசி அலட்சியபடுத்தி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விசுவநாதன், தனது வீட்டுற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Image result for தூக்கிட்டு தற்கொலை

விசுவநாதன் தற்கொலை செய்து கொண்டததையடுத்து சேலையூர் போலீசார் விசுவநாதனை தாக்கிய மதன், ஸ்ரீதர், ஷியாம் சுந்தர், புலேஷ்வரன், லோகேஷ், தினேஷ் குமார், வெங்கடேஷ் ஆகிய ஏழு பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தன்றே புகார் பெற்று நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிர் போய் இருக்காது.இது போல் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்லவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close