[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

இன்றைய தலைப்பு செய்திகள்

today-head-lines

மக்களின் நம்பிக்கையை பெறுவதைத் தவிர மிகப்பெரிய வெற்றி ஏதும் தமக்கில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மடிக்கணினி வழங்காததை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, பத்திரிகையாளர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் சார் ஆட்சியர் வீட்டில் 131 சவரன் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுகவின் சார்பில் தலா மூன்று எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தங்க தமிழ்ச்செல்வனை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் பேசிய ஆடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவர்களின் பாசப் போராட்டத்தால் திருவள்ளூரில் ஆசிரியர் ‌ஒருவரின் பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close