[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்

madras-high-court-dissatisfaction-on-tn-government-activities

சட்டவிரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம். நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்று கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருந்தால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்.

அத்துடன், சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அதேநேரத்தில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை நீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும், நாளை (ஜூன் 25) அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close