[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை

teacher-commits-suicide-near-tiruvarur

பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் நடுபட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவர் மீது மன்னார்குடி அடுத்த கூனமடை கிராமத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் தனது உறவினரான சதீஷ்குமார் அடிக்கடி தங்களது வீட்டுக்கு வந்து சென்றதாகவும் அது முதல் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சுரேஷை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த ஆசிரியர் சுரேஷ், மன்னார்குடி அடுத்த வேட்டைதிடல் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.  அங்கு ஆசிரியர் சுரேஷ் அவமானத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மன்னார்குடி தாலுகா காவல்நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close