[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

நளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு

chennai-hc-ordered-to-tn-government-to-present-nalini-for-investigation

பரோல் கோரிய மனு மீதான விசாரணையில் வேலூர் சிறையில் உள்ள நளினியை வரும் 5-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி‌கள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை அரசு எவ்வாறு தடுக்கும் எனக் கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு, பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என எவ்வாறு கூற முடியும் என்று கூறி நளினியிடம் தகவலை பெற்று தர சிறைத் துறைக்கு உத்தரவிட்டனர்.

காணொலி மூலம் ஆஜராக நளினி விரும்பாததாகவும், நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததாகவும் கூறினார். இதையடுத்து ஜூலை 5-ஆம் தேதி மதியம் 2 மணி 15 நிமிடத்திற்கு நளினியை ஆஜர்ப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close