[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

ஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !

ishari-ganesh-faces-charge-of-trying-to-influence-judge

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக ஐசரி கணேஷ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் தலையீடு செய்ய முயன்றதாக ஐசரி கணேஷ் மீது நிதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள ஆணையில், “நான் பணி நிமித்தமாக வேலூர் சென்றிருந்தேன். அப்போது எனக்கு உயர்நீதிமன்ற பதிவாளர் தொலைபேசியில் அழைத்து என்னுடைய வீட்டில் மாலை 5 மணிக்கு நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறினார். இதனையடுத்து நான் சென்னைக்கு திரும்பினேன். அப்போது சரியாக மாலை 4.20 மணியளவில் அனந்தராமன் என்பவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். அத்துடன் அவர் நடிகர் சங்க தேர்தல் வழக்கை வரும் ஜூன் 23ஆம் தேதி வரை ஒத்திவைக்க கூறினார். ஏனென்றால் ஐசரி கணேஷ் அவருக்கு மிகவும் வேண்டியவராவர். அவர் இந்த நடிகர் சங்க தேர்தல் சம்பந்தப் பட்டுள்ளதால் இதனைத் தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு நான் எதுவும் கூறாமல் தொலைப் பேசி அழைப்பை துண்டித்து விட்டேன். 

அதற்குபின் மீண்டும் 4.45 மணியளவில் மீண்டும் என்னை வந்த சந்தித்த அனந்தராமன் தேர்தலை 2 அல்லது 3 வாரம் தள்ளிவைக்கும்படி ஆணையிடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் மீண்டும் முடியாது என்று கூறி அவரை அங்கு கிளம்பும் படி அறிவுறுத்தினேன். இதன்பின்னர் அனந்தராமன் என்னுடைய வீட்டிலிருந்துதான் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை எனது மனைவியின் மூலம் அறிந்துகொண்டேன்.  இதனையடுத்து அவர்கள் என்னுடைய வழக்கு விசாரணையில் தலையீட முயன்றார்கள் என்று தெளிவாக உணர்ந்தேன். எனவே இவர்கள் இருவர் மீது நானே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close