[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

dekedatu-dam-issue-cm-palanisamy-letter-to-pm-modi

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு, சுற்றுச் சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் கருத்துக்களை கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அரசு உள்ளிட்ட காவிரி நீர் பாயும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close