[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

இன்றைய தலைப்புச் செய்திகள்

today-head-lines

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், துறைவாரியாக அறிவிக்கப்படவிருக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. மேலும், குடிநீர் தட்டுப்பாடு, கடுமையான வறட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் மேற்கொள்ள வேண்டிய விவாதம், நடவடிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு நிலவி வரும் நிலையில், வன விலங்குகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்ற அமெரிக்காவின் அறிக்கைக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close