[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்த இளைஞர் கைது 

the-youth-arrested-for-pornography-of-school-girl-in-omalur

ஓமலூர் அருகே பள்ளி மாணவியை செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்த இளைஞரை ஊர் பொதுமக்கள் சுற்றிவளைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள வீரக்கல்பட்டி பகுதியில் விவசாயி ஒருவர் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களது மகள் மேட்டூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை மாணவி வீட்டிற்கு வெளியே உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்த போது, அங்குவந்த ஒரு இளைஞர் அவரது செல்போனில் மாணவி குளிப்பதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டு இருந்துள்ளார். 

Image result for பள்ளி மாணவி ஆபாச படம்

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, குளியலறை பக்கம் இருந்து ஒரு இளைஞர் வேகமாக ஓடியுள்ளார். அவரைக் கிராமமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர்.  இதனைத்தொடர்ந்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் பள்ளி சிறுமி என்பதால் இந்த வழக்கு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் தாய் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

Related image

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவி குளிப்பதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் சேலம், பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சதீஸ்குமார் என்பது தெரியவந்தது. இதைத்தெடர்ந்து அவரிடமிருந்த செல்பேனை பறிமுதல் செய்த போலீசார் போனில் இருந்த வீடியோ மற்றும் போட்டோ பதிவுகளை அழித்தனர். மேலும், அந்த இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்து சேலம் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close