[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு 

the-lpg-tanker-lorry-owners-association-has-announced-that-indefinite-strike

ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து கால‌வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை உள்ளடக்கி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளிலிருந்து கேஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். 

Related image

இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாயிரத்து 500 வாகனங்களுக்கு சங்கத்தின் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது‌. ஆனால், நான்காயிரத்து 800 வாகனங்களுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்கி‌ன. இதனால் மீதமுள்ள 700‌ வாகனங்களுக்கு பணி ஒப்பந்தம் வழங்குமாறு சங்கத்தின் சார்பில் பல முறை எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணி ஒப்பந்தம் வழங்கப்படவில்லை‌. 

Related image

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென தீர்மா‌னம் நிறைவேற்றப்பட்டது. இதைத்‌தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி காலை 6 மணியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்‌தத்தில் ஈடுபட‌ ‌உள்ளதாக தென்ம‌ண்ட‌ல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் அறிவித்துள்ளபடி போராட்டம் நடைபெற்‌றால்,‌ கேஸ் கொண்டு செல்லும் பணிகள் பாதிக்‌கப்படும். ஒரு வாரத்துக்கும் மேல் வேலைநிறுத்தம் நீடித்தால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close