[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சென்னையில் குளு குளு மழை : மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்

rain-in-chennai-today

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த 8-ஆம் தேதி கேரளா மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, வாயு புயல் காரணமாக வடக்கு நோக்கி நகர்வது தடை பட்டது. இதனாலேயே தமிழகத்தில் அனல் காற்று வீசியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. தற்போது ராயல்சீமா மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை நகர்ந்ததால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை குறையும் என கூறப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. 

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கிண்டி, ஏர்போர்ட், குரோம்பேட்டை, தாம்பரம், செங்கல்பட்டு, கோயம்பேடு, ரெட்டேரி, கொளத்தூர், செங்குன்றம், திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம், ஓட்டேரி, அயனாவரம்,  பெசண்ட் நகர், திருவான்மியூர், போரூர், ஆதம்பாக்கம், அடையாறு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close