[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

“குடிநீர்‌ தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது”- பள்ளிகளுக்கு எச்சரிக்கை

water-scarcity-warning-to-schools

குடிநீர் ‌தட்டுப்பாடு காரணமாக விடுமுறை விடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், குடிநீர் வசதி இல்லை என சில தனியார் பள்ளிகள் விடுமுறை விடுவதாக செய்திகள் வருகிறது என்றும், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் இவ்வாறு விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாடு இருந்தால் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டியது பள்ளிகளின் கடமை என குறிப்பிட்டுள்ள பள்ளி கல்வித்துறை, அவ்வாறு செயல்பட தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அனைத்து வகை தனியார் பள்ளிகளும் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை ‌விடாமல் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சில பள்ளிகள் அரைநாள் விடுமுறை அறிவித்திருந்தன. இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close