[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-22062019

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் 2‌ நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் மேலும் குறையும் எனவும் வானிலை மையம் தகவல்

மழை வேண்டி கோயில்களில் இன்று யாகம் நடத்த வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேர்தலை நடத்த அனுமதி வழங்கிய நிலையில், அதேசமயம் வாக்கு எண்ணிக்கை கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் திட்டப்பணிகளுக்கு கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கம்.

வரிக்குறைப்பு பலன்களை மக்களுக்கு வழங்காத நிறுவனங்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close