[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

கொலை செய்துவிட்டு நாடகமாடிய திருநங்கைகள் - பின்னணி என்ன ?

8-transgenders-killed-on-transgender-in-chennai

சென்னை மாங்காட்டில் திருநங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய 8 திருநங்கைகள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குருவி மலையில் வசித்து வந்த 6 திருநங்கைகள் கடந்த புதன்கிழமை காரில் கடத்திச் செல்லப்பட்டனர். இதுதொடர்பாக குன்றத்தூரைச் சேர்ந்த திருநங்கைகள் மகாலட்சுமி, வடிவு, சுப்ரியா, லட்சுமி, ஹரிணி மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த ரமேஷ், கார்த்திக், செல்வம், சேகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்ட 6 பேர் உள்பட 8 திருநங்கைகள் மாங்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தங்களுடன் வசித்த சவுமியா என்ற திருநங்கையை கொலை செய்ததாகக் கூறி 8 பேரும் சரணடைந்துள்ளனர். 

கொல்லப்பட்ட சவுமியா மற்றும் அவரை கொலை செய்த 8 பேர் உள்பட பல திருநங்கைகள் மகாலட்சுமியின் கட்டுப்பாட்டில் இருந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன் சிக்கராயபுரம் கல்குவாரியில் குளித்த போது மதுபோதையில் சவுமியாவை 8 பேரும் அடித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மகாலட்சுமி, கொலையை மறைக்கும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி, ‌சவுமியா கல்குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக 8 பேரும் நாடகமாடியுள்ளனர். 

அதன்பின், 8 பேரும் நாளொன்றுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் தராவிட்டால் காவல்துறையினரிடம் காட்டிக் கொடுத்துவிடுவேன் என மகாலட்சுமி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் 8 பேரும் அவரிடமிருந்து தப்பியுள்ளனர். குருவி மலையில் தஞ்சமடைந்திருந்தவர்களை மகாலட்சுமி கடத்தியுள்ளார். காவல்துறையினரால் மீட்கப்பட்டவர்கள் இனியும் கொலையை மறைக்க முடியாது என்ற எண்ணத்தில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close