[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

வாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்

dharumapuri-collector-immediately-cleared-water-issue-with-whatspp-complaint

குடிநீர் பிரச்னை குறித்து வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்த உடன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்தது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 

அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வறட்சி காரணமாக 3 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் கிடைப்பதாகவும், அதுவும் போதுமானதாக இல்லை என்றும் இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தார். 

இதையடு‌த்து நேற்று மாலையே குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளரை கொளகம்பட்டி கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுப்பி வைத்தார். அத்துடன் தண்ணீர் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். 

அத்துடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்குவதில் உள்ள சிரமத்தை சரி செய்து, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீரை ஏற்ற நடவடிக்கை எடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை கிராமத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்பட்டது. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கிராம மக்கள் போதுமான அளவு தண்ணீரை எந்தச் சிரமமும் இல்லாமல் பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். வாட்ஸ் அப் மூலமாக புகார் தெரிவித்து உடனேயே உரிய நடவடிக்கை எடுத்து கிராமத்திற்கு குடிநீர்  வினியோகம் செய்ய வைத்த ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close