JUST IN
 • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
 • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
 • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
 • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
 • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
 • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
 • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு 20 Jun, 2016 02:45 PM

EXCLUSIVE: பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல லஞ்சம் கேட்ட போலீஸார்

“காவல்துறை உங்கள் நண்பன்” என்கிற கூற்றை பல இடங்களில், சில போலீசார் பின்பற்றத் தவறுவதால், புகார் கொடுப்பவர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.. இவ்வாறு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்...? அதற்கு இடையே நடந்தவை என்ன?... விவரிக்கிறது... புதிய தலைமுறையின் இந்த பிரத்யேக செய்தித்தொகுப்பு...

தான் சந்தித்த வேதனைகளை., தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமலேயே விவரிக்கும் இந்த சிறுமி, சென்னை போரூரைச் சேர்ந்தவர்... தந்தையை இழந்த நிலையில், தாயார் மற்றும் தங்கையுடன் தனியார் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்தபோது, அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பாக, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கடந்த மாதம் 6ஆம் தேதி புகார் அளித்தார். அதை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் வாக்குமூலத்தை பதிவு செய்யவும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் பெண் போலீசார் அலைக்கழித்துள்ளதாக கூறுகிறார் இந்தச் சிறுமி..

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல, இம்மாதம் 8ஆம் தேதி பெண் காவலர் வேல்விழி 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து, மற்றொரு பெண் காவலர் நளினி, கடந்த 13ஆம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியிடம், 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இவர்களைத் தொடர்ந்து, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலைய தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி, கடந்த 17ஆம் தேதி 3 ஆயிரத்து 300 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இவற்றின் உரையாடல் பதிவு புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையில், பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி, லஞ்சம் பெறும் போது, கையும் களவுமாக லஞ்சம் ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.இருப்பினும் சிறுமிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவோ அவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவோ காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads