[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

சென்னை சிறுவனுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் கடிதம்

pm-modi-wrote-letter-to-chennai-school-kid

பிரதமர் மோடிக்கு சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் பிரணவ் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார், வித்யா தம்பதியின் மகன் பிரணவ் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே கடிதம் எழுதுவதில் ஆர்வம் கொண்ட பிரணவ் கடந்த ஆண்டு புத்தகச்சுமையை குறைக்க உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார், அதற்கு பதில் கிடைத்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக பாஜக வெற்றி பெற்றதை அடுத்து மே 24ஆம் தேதியே பிரணவ் தன் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

அதற்கு நன்றி தெரிவித்தும், தமது அரசு மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்தும் பிரதமர் அனுப்பிய கடிதம் கடந்த 18ஆம் தேதி பிரணவ் கையில் கிடைத்துள்ளது. பிரதமர் அனுப்பிய கடிதத்தை தன் பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் காட்டி மகிழும் பிரணவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close