[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை 

chennai-is-likely-to-experience-wet-weather

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெயிலின் வெப்பத்தை குறைக்கும் விதமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. ஆனால் சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை.

இதன் எதிரொலியாக ‌கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான வறட்சியை சென்னை சந்தித்தது. வறட்சியில் விடுபட மழை பெய்தாகவேண்டுமென்ற காட்டாயத்தில் சென்னை மக்கள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தென்சென்னையில் பரவலாக இன்று மழை பெய்தது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

மேலும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடல்காற்று நிலப்பகுதியை நோக்கி வீசுவதால் வெப்பநிலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close