[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

இன்றைய முக்கியச் செய்திகள் சில !

important-news-still-today

டெல்லியில் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். பல்வேறு துறை அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுவார் எனத் தகவல்.

சென்னையில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீரே இருக்காது என நிதி ஆயோக் அறிக்கையில் தகவல். தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2030-ம் ஆண்டு நாட்டில் குடிநீரே இருக்காது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தகவல்

காயம் குணம் அடையாத காரணத்தினால் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலகினார் ஷிகர் தவான். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் அணியில் இணைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்த‌ரவிட்டுள்ளார். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வரை நிறுத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close