ரூ.30 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாததையொட்டி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரே வளாகத்தில் 5 திரையரங்குகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. ஒரே வளாகத்தில் உள்ள 5 திரையரங்குகள் ஒரு வருடமாக மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய கேளிக்கை வரியை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனடிப்படையில் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். திரையரங்கம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்ற கேளிக்கை வரியில் இருந்து அரசு ஆணைப்படி 30 சதவிகிதம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி சார்பில் திரையரங்க உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்க நிர்வாகம் கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
ஆனால் தங்களுக்கு எவ்வித அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை என திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ. 30 லட்சத்தை செலுத்தாததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்