[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

2 நாட்களுக்கு பிறகு மழை - வானிலை ஆய்வு மையம்

after-two-days-in-tamil-nadu-the-impact-of-winds-will-decrease

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு அனல் காற்றின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் இயல்பை விட வெப்பம் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும் என்பதால் காலை 11 மணி முதல் 3 மணி வரையில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் சென்னை உள்பட 14 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் 108 என்ற அளவிலும், நாகை, நுங்கம்பாக்கத்தில் 106 என்ற அளவும், மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலும் வெப்பம் பதிவாகியுள்ளது. 

வேலூர், திருச்சி, மதுரை தெற்கு, புதுச்சேரி பரங்கிப்பேட்டை, காரைக்கால், கரூர் பரமத்தி, தொண்டி, கடலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3-4 நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறையும் எனவும் 
21 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close