[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

கிருஷ்ணகிரியில் மாங்கனி விழா - கண்ணைக் கவரும் அழகிய கண்காட்சி

exhibition-and-mango-festival-at-krishnagiri

27 வது அகில இந்திய மாங்கனி திருவிழா கிருஷ்ணகிரியில் தொடக்கியுள்ளது. அதில் 600 கிலோ எடையில் நறுமண பொருட்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட மாங்கனி பாராளுமன்ற வளாகம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் தோட்டக்கலை மாவட்டம் என்று அழைக்கப்படும். இம்மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் ஆண்டுதோறும் மாங்கனிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். மேலும் இம்மாவட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் மாங்கனிகள்  பழக்கூழாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சம் கொண்ட இம்மாவட்டத்தின் மாங்கனிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி விழா நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தாண்டுக்கான 27 வது அகில இந்திய மாங்கனி விழா இன்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது. அதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் மா போட்டி அரங்கு அமைக்கப்பட்டு அதில் நாடு முழுவதும் உள்ள மா விவசாயிகள் சாகுபடி செய்த செந்தூர, மால்கோவா, அல்போன்சா, பங்கனபள்ளி, கோத்தபுரி போன்ற 50 வகையான மாங்கனிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சிறந்த மாங்கனியை தேர்வு செய்யப்பட்டு அந்த விவசாயிகளுக்கு கண்காட்சியின் இறுதி நாளில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்களால் உருவாக்கப்பட்ட பென்குயின் உலக கோப்பை கிரிக்கெட் பால் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறை ஊழியர்களை கொண்டு 11 அடி நீளம் 8 அடி சுற்றுளவு 5 அடி உயரம் 20 அடி அகலம் கொண்ட நாடாளுமன்ற தோற்றம் கொண்ட மாதிரி வடிமைத்தை 50 கிலோ நறுமண பொருட்களான ஜாதிக்காய், அன்னாட்சி, ஏலக்காய், சோம்பு, சிரகம், போன்ற 14 வகையான சிறு தானியங்களை கொண்டு 600 கிலோ எடையில் வடிவமைத்துள்ளார். இதனை கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்து செல்போனில் செல்ஃபி எடுத்து செல்கின்றனர். 

இது தவிர கண்காட்சியில் 80 வணிக வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் 40 அரசுத்துறை அரங்குகள் குழந்தைகள் விளையாட பொழுதுபோக்குகள் தின்பண்டம் என பல்வேறு அரங்குகள் உள்ளது. நாள்தோறும் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தபடவுள்ளன. இன்று முதல் 29 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close