[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

திருமாவளவன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

case-registered-on-thirumavalavan

சிதம்பரம் தொகுதி எம்.பியான தொல்.திருமாவளவன் மீது அசோக்நகர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த மே மாதம் 18-ந் தேதி அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றும் கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்றும் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் திருமாவளவன் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இருபிரிவினரிடையே அமைதியை சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close