[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் - முதலமைச்சர் 

edappadi-pazhanisamy-byte-about-met-modi-and-union-ministers

டெல்லியில் பிரதமரிடமும் மத்திய அமைச்சர்களிடமும் வைத்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தில் நிலவும் வறட்சி, குடிநீர் பிரச்னை குறித்து விவரித்து காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். கோரிக்கைகள் அடங்கிய மனுவும் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,‌ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர், மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். 

பின்னர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதலமைச்சர் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினார். அத்துடன் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். காவிரி நதி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது, சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும், நெய்வேலி, ஓசூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு உடான் திட்டத்தில் விமானங்களை இயக்க வேண்டும்,

நிலுவையில் உள்ள மாநில அரசுக்கான நிலுவைத் தொகைகளை விடுவிக்க வேண்டும், குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆணையத்தின் மூலமே காவிரி நீரை பெற முடியும். கர்நாடக முதல்வரை தனித்து சந்தித்தால் கிடைக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரும் மத்திய அமைச்சர்களும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து எதிர்கட்சி செய்ததை கேள்வி கேளுங்கள் எனவும் எங்களிடமே கேள்வி கேட்கிறீர்கள் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். மேலும் சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் பிரதமரிடம் முதலைச்சர் மனு அளித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close