[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

அறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது

sexual-harassment-during-treatment-one-arrested

சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் மயக்க நிலையிலிருந்த பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினருடன் போராடி வருகிறார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மூட்டுவலியால் அவதிப்பட்ட அவர், அறுவை சிகிச்சைக்காக சென்னை பெருங்குடியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 5-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

அப்போது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணுக்கு உதவி மயக்க மருந்தாளர் டில்லிபாபு என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாலும், அரை மயக்க நிலையில் இருந்ததாலும், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக அந்தப் பெண்ணால் குரல் கொடுக்க முடியவில்லை.

மயக்கம் தெளிந்தபின், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், ஆன்லைன் மூலம் காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக, விசாரிக்க வந்த காவல்துறையினரிடம் சம்பந்தப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் மீண்டும் தனது புகாரை பதிவு செய்தார். அதன்பின்பே துரைப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உண்மை எனத் தெரியவந்தது. அதனையடுத்து, உதவி மயக்க மருந்தாளுனர் டில்லிபாபுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறினாலும், சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கு பிறகே குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட பெண்ணை மேலும் அதிருப்தியடையச் செய்துள்ளது. தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மருத்துவமனை நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close