[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தேன்மொழி வீட்டிற்கு பெண் கேட்டு சென்ற சுரேந்தர் - விசாரணையில் திடீர் திருப்பம்

man-attack-his-lover-in-chennai-railway-station

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழியை சுரேந்தர் நேற்று அரிவாளால் வெட்டிய நிலையில், இதற்கு முன் சுரேந்தர் தன் நண்பர்களுடன் தேன்மொழியின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தையிடம் பெண் கேட்டது தெரியவந்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி, எழும்பூர் பெண்கள் விடுதியில் தங்கியபடி சென்னை கீழ்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர், தேன்மொழியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து விடுதி திரும்ப காத்திருந்த தேன்மொழியை, சுரேந்தர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் தாடை, கை விரல்களில் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர். இதற்குள் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து சுரேந்தரும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சுரேந்தர் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏற்கெனவே சுரேந்தர் தன் நண்பர்களுடன் சேர்ந்து தேன்மொழியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் பெண் கேட்டது தெரியவந்துளள்து. சினிமா பாணியில் நண்பர்களுடன் சென்று பெண் கேட்ட சுரேந்தரை, தேன்மொழியின் தந்தை கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பி உள்ளார். இதன்பின்  சுரேந்தரிடம் பேசுவதை தேன்மொழியும் நிறுத்தியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் அதற்குப் பின்னரே சுரேந்தர் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே தேன்மொழியை அரிவாளால் வெட்டிவிட்டு சுரேந்தர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அவரது தநதையிடம் போலீசார் தகவல் கொடுத்தனர். அப்போது  திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள போவதாக கூறிவிட்டுதான் சுரேந்தர் சென்னை சென்றதாக கூறினார். காதல் விவகாரம் குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என்றும் இப்போது மகனுக்கு ஏற்பட்டு நிலையை பற்றி கேட்டதும் இதயமே வெடிக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close