[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

“எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்துவிட்டது”- சேத்துப்பட்டு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல்..!

new-update-on-chetpet-murder-attempt

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழியை, சுரேந்தர் பின்னால் வந்து அரிவாளால் வெட்டியதாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி, எழும்பூர் பெண்கள் விடுதியில் தங்கியபடி சென்னை கீழ்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர், தேன்மொழியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இவர்களது திருமணத்திற்கு தேன்மொழியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தேன்மொழி படிப்படியாக சுரேந்தருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து விடுதி திரும்ப காத்திருந்த தேன்மொழியை, சுரேந்தர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தாடை, கை விரல்களில் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர். இதற்குள் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து சுரேந்தரும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சுரேந்தர் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தேன்மொழியை, சுரேந்தர் பின்னால் வந்து அரிவாளால் வெட்டியதாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் கூறும்போது, “ தாக்கப்பட்டதால் அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு சாய்ந்தார். ஒரு நிமிடத்தில் இந்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றுவிட்டன. கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஆம்புலன்சுக்கு அழைத்து, அப்பெண்ணை அனுப்பி வைத்தோம். அந்த இளைஞரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்” எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close