[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

தண்ணீர் பிரச்னையை தொடர்ந்து இப்போது மின்தடை... நிம்மதி இழந்த சென்னைவாசிகள்..!

power-cut-across-chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர்.

கத்திரி வெயில் முடிந்தாலும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சொல்லப்போனால் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. மதிய வேளைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

இப்போது போதாக்குறைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர். இந்தநேரம் தான் மின்தடை இருக்கும் என்ற எந்த முன்அறிவிப்புமின்றி சுமார் இரண்டு மூன்று மணி நேரம் மின்தடை நிலவுகிறது. சில இடங்களில் குறைந்த  மின்னழுத்த பிரச்னையும் ஏற்படுகிறது. ஏற்கெனவே வெயிலில் வெதும்பும் மக்கள் மின்தடையால் மேலும் அவதியுறுகின்றனர்.

காலையில் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியவர்கள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியவர்கள், வயதானவர்கள் என எல்லோரும் இந்த இரவு நேர மின்தடையால் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். மின்தடை குறித்து அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் முறையான பதில் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

சென்னையில் சைதாப்பேட்டை, வேளச்சேரி, வில்லிவாக்கம், தி.நகர், சூளைமேடு, கே.கே.நகர், பல்லாவரம், அனகாபுத்தூர், உள்ளிட்ட பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சென்னையின் அனைத்து இடங்களிலும் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தற்போது தண்ணீர் பிரச்னையோடு மின்வெட்டு பிரச்னையும் மக்கள் சந்தித்து வருவதால் தங்களது நிம்மதியை இழந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close