[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

இன்றைய முக்கியச் செய்திகள் சில..!

today-important-news

டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பிரதமரிடம் பேசுவார் எனத் தகவல்.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. பெண்ணைத் தாக்கிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்தார்.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

பயங்கரவாதத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு, அதைத் தூண்டிவிடும் நாடுகளையே பொறுப்பாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டத்தில் இம்ரான் கான் முன்னிலையில் பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து 100-க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஜூன் 17 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close