[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்" - நடிகர் விவேக்

students-need-to-dig-water-places-actor-vivek

நீர்நிலைகளை தூர்வார மாணவர்கள், இளைஞர்கள் முன்வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வேலூர் ஊரிஸ் கலை கல்லூரியில் ஈஷா பசுமைப் கரங்கள் மற்றும் வேலூர் மாவட்ட கல்வித்துறை இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு பசுமை இயக்க மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் அதன் அவசியம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விவேக் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரி வளாகத்தில் நடிகர் விவேக் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தனர்.

பின்னர் பேசிய நடிகர் விவேக், “மாணவர்களாகிய நீங்களே ஏரி, குளங்களை தூர் வார வேண்டும் அதோடு மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். அன்று மரத்த வச்சவன் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொன்னது பழமொழி. ஆனால் இன்று யாரு மரத்தை வச்சாலும் நாம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

மேலும் படிக்கும் மாணவர்கள் ஒரு பட்டம் பெற வேண்டும் என்றால் இத்தனை மரம் நட்டிருந்தால் தான் பட்டம் பெற முடியும் என்ற ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் பல லட்சம் மரக்கன்றுகள் நடலாம். இத்திட்டத்தை அரசு நடைமுறை படுத்த வேண்டும்” என்றார். மேலும் பேசிய அவர், மரத்தின் அவசியம் அது செய்யும் நன்மைகள் குறித்து பல விஷயங்களை நகைச்சுவையுடன் மாணவர்களுக்கு கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close