[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை” - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்

24-questions-mistake-in-group-1-exam-says-tnpsc-in-high-court

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முன்னதாக, கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

இதனை எதிர்த்து விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

டி.என்.எஸ்.சி-யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஜூன் 17-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி'க்கு உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close