[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

“ நேரம் தவறாமல் அலுவலகத்துக்கு வாருங்கள் ”- அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை

pm-modi-advice-to-ministers

மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் வகையில் மத்திய அமைச்சர்கள் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும் வீட்டிலிருந்தே பணி செய்வதை தவிர்க்கவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் மீண்டும் ஆட்சியமைத்த பின்னர் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதாவது மத்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் வகையில் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தினார். மற்றும் வீட்டிலிருந்தே பணி செய்யவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய மோடி, மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கும் வகையில் கேபினட் அமைச்சர்கள் முக்கிய கோப்புகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், இதன்மூலம் வேலைத்திறன் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். அமைச்சர்கள் அலுவலத்திற்கு வருவதுடன் அவ்வப்போது கட்சி எம்பிக்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவேண்டும் எனவும் மோடி அறிவுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close