[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

ஓய்வு பெறவுள்ள டி.ஜி.பி ராஜேந்திரன் - அடுத்த டி.ஜி.பி யார் ?

who-s-next-dgp-for-tamil-nadu

தமிழக டிஜிபி நியமனப் பட்டியலில் ஜே.கே.திரிபாதி, ஜாபர் சேட் ஆகியோரின் பெயர்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், புதிய டிஜிபி நியமனப் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா, தமிழ்ச்செல்வன், ஆசீஷ் பங்ரா, சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகிய 14 பேரின் பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பியது.

இவர்களில் ஜாங்கிட், காந்திராஜன், ஆசீஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா ஆகியோர் 6 மாதங்களுக்கு உள்ளாகவே ஓய்வு பெற உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ளவரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்பதால் இவர்கள் 4 பேரும் டிஜிபியாகும் வாய்ப்பை இழந்தனர். 

மீதமுள்ள 10 பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.கே.திரிபாதி, சிபிசிஐடி தலைவராக உள்ள ஜாபர் சேட் ஆகிய இருவரும் டிஜிபி நியமனப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் அல்லாமல், ஸ்ரீலட்சுமி பிரசாத், அஷிதோஷ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா உள்ளிட்டோரும் பட்டியலில் உள்ளனர்.

பட்டியலில் முன்னணியில் உள்ள ஜே.கே.திரிபாதி சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர். திமுக ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட், அதிமுக அரசு அமைந்ததும் மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சிபிசிஐடி தலைவராக பொறுப்பேற்றார். வீட்டுமனை வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் ஜாபர் சேட்டுக்கு எதிரான சிறப்பு நீதிமன்ற நடைமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவரது பெயரையும் தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் முதல் மூன்று அதிகாரிகளின் பெயரை யுபிஎஸ்சி இந்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் இருந்து ஒருவர் தமிழக டிஜிபியாக நியமிக்கப்படுவார். தமிழக டிஜிபியாக ஜே.கே.திரிபாதியின் பெயரை மத்திய அரசு பரிந்துரைப்பதாகவும், ஜாபர் சேட்டின் பெயரை மாநில அரசு பரிந்துரைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close