[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

“15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு” - அதிமுக தலைமை திட்டம்

15-members-committee-will-arrange-in-admk-for-decision-making

ஒற்றைத் தலைமை சர்ச்சையை தொடர்ந்து அதிமுகவில் 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுகவில் அண்மைக்காலமாக உட்கட்சி சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனத் தெரிவித்தார். குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் அதனை வழிமொழிந்தார். இதனால் சர்ச்சை அதிகமானது. 

இந்தச் சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை, அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களில் கருத்துக்களை பகிர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக கட்சி நடவடிக்கைகளை சீர்படுத்த 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

இந்தக் குழு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களை கொண்டே திகழும் எனப்படுகிறது. எனவே இதில் மூத்த அமைச்சர்கள் இடம்பெறலாம். ஏற்கனவே 4 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு இருக்கும் நிலையில், கூடுதலாக 11 பேர் நியமிக்கப்பட்டு மொத்தம் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close