[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டம்: 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை!

4-mla-s-didn-t-participate-aiadmk-district-secretaries-meeting

அதிமுக கூட்டியுள்ள எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள்‌ கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இன்று நடைபெறவுள்ளது. 

’’அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும், இரட்டைத் தலைமையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம். அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். ஆளுமைத் திறனுடைய ஒரு தலைவர் இல்லை. இதனால் கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது’’ மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் குரல் கொடுத்தார். ‘இரட்டை தலைமை இருப்பதால், தலைவர்களுக்குள் ஈகோ இருப்பதாக நினைக்கிறோம்’ என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் ராஜன் செல்லப்பாவை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும்  பங்கேற்கவில்லை. அவர் உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close