[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

“வயிற்றுக்குள் துணிவைத்து தைக்கப்பட்டதா..?”- இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை என புகார்..!

private-hospital-with-stomach-has-was-stuck-with-the-fabric-during-surgery

கோவையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிசியனாக பணியாற்றி வரும் இவர், தனது கணவர் கணேசனுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு கர்ப்பப்பை பிரச்சனை இருந்ததால், கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலியகுளம் பகுதியில் உள்ள ஜெனிசிஸ் ராயல் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார். கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் துணியை வைத்து அம்மருத்துவனை மருத்துவர் சந்திரகலா தைத்து விட்டதாகவும், 4 மாதங்களுக்கு பின்னரே வயிற்றில் துணி இருப்பது தெரியவந்ததையடுத்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து தற்போது ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளில் பேசி வெளியே அனுப்பி விட்டதாகவும், கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சந்திரகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். அம்மருத்துவமனையின் அஜாக்கிரதை காரணமாக குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கடந்த வாரம் ஒரு தம்பதி மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அதே மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், மருத்துவர் மீதும் மேலும் ஒரு புகார் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close