[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

கொள்ளையர்களிடம் போராடிய இளைஞர்... சிசிடிவி காட்சிகள்..!

youth-fight-with-robber-man-cctv-footage

சென்னை ஆழ்வார்பேட்டையில் செல்போனை பறித்த வழிப்பறி கொள்ளையர்களிடம் இளைஞர் ஒருவர் போராடும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கடை ஒன்றில், சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து வெளியே வந்த இவர், டிடிகே சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது திடீரென அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூவர், சரவணனின் செல்போனை பறித்துச் செல்ல முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட சரவணன், கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தை பிடித்து தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், சினிமாவில் சண்டைக் காட்சியில் வருவது போல, கொள்ளையர்கள் அவரை சாலையில் தரதரவென இழுத்துச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சரவணன் இழுத்ததில், தவறி விழுந்த கொள்ளையர்கள், சரவணனை சரமாரியாக தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேனாம்பேட்டை காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பழனி உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர். அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்கள், திருடப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 டூவீலர்கள், செல்போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close