[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அரபிக் கடலில் உருவாகுகிறது புதிய புயல்.. கனமழை எச்சரிக்கை..!

low-pressure-formed-in-arabian-sea

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாவும், அது புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம், “லட்சத்தீவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலமாக மாறும். இதனால் ஜூன் 12-ஆம் தேதி மலப்புரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் மிகுந்த கனமழை பெய்யலாம்” எனத் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு சில நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், அரபிக் கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனையடுத்து கடந்தாண்டு பருவமழையின் போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்தாண்டு பருவமழையின் போது 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய கேரள வெள்ளத்தால் மாநிலமே உருமாறிப் போனது. அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக கேரளா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close