[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

“ சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுங்கள் ”- ஸ்டாலின் வலியுறுத்தல்

mk-stalin-demand-immediate-assembly-meeting

தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் கட்சி உறுப்பினர்களே தொடுக்கும் கேள்விக்கணைகளால் எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, சட்டப்பேரவையைக் கூட்டுவது தாமதமானால் ஆளுநர் அதில் தலையிட வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.  சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாமல் அரசுத்துறை பணிகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தண்ணீர் பஞ்சம், மேட்டூர் அணை திறப்பு, காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறக்காதது, நீட் விவகாரம், போன்ற தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வுக்காண வேண்டிய நிலையில், பேரவைக் கூட்டத்தை தாமதப்படுத்துவது தேவையில்லாத நெருக்கடியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனால், உடனடியாக பேரவைக் கூட்டத்தை கூட்டிட ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close