[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

குடித்துவிட்டு தகராறு செய்து ஒருவரை கொன்ற ரவுடி : போலீஸ் அலட்சியம் ?

rowdy-killed-a-man-in-nagai-police-careless-reason-for-murder

சீர்காழி அருகே குடிபோதையில் தகராறு செய்த ரவுடி, ஒருவரை கொலை செய்துள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம், பரவங்காட்டை சேர்ந்தவர் நடராஜமணி (40). இவர் சென்னையில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று விடுப்பில் ஊருக்கு வந்துள்ள நிலையில், இரவு நடராஜமணியிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திக் (36) என்பவர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். அதனை தடுக்க வந்த நடராஜமணியின் தாயார் தனத்தை ரவுடி கார்த்தி  பிடித்து தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த தனம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 

(கறுப்பு சட்டை : கார்த்திக் மற்றும் அவரது நண்பர்)

இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினரிடம் நேற்று இரவே நடராஜமணியின் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் உள்ள தனது தாயை பார்க்க நடராஜமணி வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது, ரயில் நிலையம் அருகே மறைந்திருந்த ரவுடி கார்த்திக் மற்றும் அவரது நண்பன் சத்தியா (35) ஆகிய இருவரும் நடராஜமணியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த நடராஜமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் விரைந்து வந்து நடராஜமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், கொலை தொடர்பாக வழக்கு பதிந்து ரவுடி கார்த்திக் மற்றும் சத்தியா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார். நடராஜமணி கொலை செய்யப்பட்டதால் அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சீர்காழி டிஎஸ்பி வந்தனா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புகார் அளித்த போதே ரவுடி கார்த்தி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று நடராஜமணி உயிர் போயிருக்காது என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close