[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மடக்கி பிடித்த கணவர் 

a-husband-as-trapped-by-a-man-who-has-sexually-harassed-to-her-wife-in-cell-phone

கன்னியாகுமரி அருகே தன் மனைவிக்கு செல்ஃபோனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை, சாமர்த்தியமாக சிக்க வைத்துள்ளார் கணவர் ஒருவர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நாகர்கோவில் பகுதியில் தனது மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து தந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு துணிக்கடையில் தனது மனைவி பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த ராம்பிரபு(37) என்பவர் துணி வாங்கியதாக தெரிகிறது. அப்போது ராம்பிரபு, சுப்பிரமணியின் மனைவியிடம் துணி வாங்குவது போன்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசியுள்ளார். மேலும் கடையின் பெயர் பலகையில் உள்ள அவரின் செல்ஃபோன் எண்ணையும் குறித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

பின்னர் ராம்பிரபு சுப்பிரமணியின் மனைவியின் செல்ஃபோன் எண்ணிற்கு முதலில் குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்தப் பெண், கணவர் சுப்பிரமணியனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும் இதுகுறித்து கோட்டாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இது சைபர் கிரைம் விவகாரம் என்பதால், காவல்துறையினர் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சுப்பிரமணியன், தனது மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் ராம்பிரபுவை கையும், களவுமாக பிடிக்க நினைத்து, அதற்காக திட்டம் ஒன்றையும் தீட்டினார். ராம்பிரபுவை பெண் குரலிலேயே பேசி ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம். 

அதன்படி, ராம்பிரபுவின் செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்ட சுப்பிரமணியன், பெண் குரலில் ஆசையாக பேசி, கடைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் ராம்பிரபு ஏமாற்றமடைந்து சுப்பிரமணியனின் மனைவியை பார்க்க துணிக்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ராம்பிரபு சுப்பிரமணியனிடம் வசமாக சிக்கியுள்ளார். பின்னர் சுப்பிரமணியன் பொதுமக்கள் உதவியுடன் ராம்பிரவை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியான அடித்த பின் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாறு காவல்துறையினர், ராம்பிரபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ராம்பிரவுவை தாக்கியதாக, சுப்பிரமணியன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close