[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறதா ஹிந்தி மோகம்?  

the-number-of-hindi-learners-has-increased-in-tamilnadu

மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஹிந்தி பயில்வோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஹிந்தி பிரச்சார் சபாவின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தென்மாநிலங்களில் ஹிந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக 1918ஆம் ‌ஆண்டில் ஹிந்தி பிரச்சார் சபா தொடங்கப்பட்டது.ஆனால் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதையடுத்து,2009-10ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து தான்  ஹிந்தி பயில்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 98 சிபிஎஸ்இ பள்ளிகளே இருந்த நிலையில், தற்போது 950 பள்ளிகளுக்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. 

Image result for hindi learning in tamil

இதனைத் தொடர்ந்து, தக்ஷன பாரத் ஹிந்தி பிரச்சார் சபா மூலம் ஹிந்தி பயில்வோரின் எண்ணிக்கையும் சுமார் 2 லட்சத்திலிருந்து 5 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் ஹிந்தி பயில்வதற்காக ஹிந்தி பிரச்சார் சபாவில் பதிவு செய்திருக்கின்றனர். அடுத்து வந்த ஆண்டுகளில் ஹிந்தி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. 2010ஆம் ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், 2011ல் 2 லட்சத்து 94 ஆயிரம் பேரும், 2012ல் 3 லட்சத்து 77‌ஆயிரம் பேரும் ஹிந்தி கற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.

Image result for Hindi

2013ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரம் பேரும், 2014ல் 4 லட்சத்து 92 ஆயிரம் பேரும், 2015ஆம் ஆண்டில் 5 லட்சத்து 23 ஆயிரம் பேரும், 2016ஆ‌ம் ஆண்டில் 5 லட்சத்து 53 ஆயிரம் பேரும் ஹிந்தி பயில பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 7 லட்சத்து 74 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டில் 5 லட்சத்து‌70 ஆயிரம் பேரும் ஹிந்தி பயில்வதற்கு ஹிந்தி பிரச்சார் சபாவில் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close