[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

அங்கீகாரமற்ற 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் - தமிழக அரசு விளக்கம்

action-on-schools-without-proper-recognition-and-facilities-in-tamil-nadu-says-tn-govt-to-high-court

தமிழகத்தில் உரிய அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை இல்லாமல் செயல்படுவதாகவும், அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்படும் 903 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Related image

இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 30 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close