[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்
  • BREAKING-NEWS தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ தொடர்ந்த மனு இன்று விசாரணை
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

30 நாட்களில் கனிமவள வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் - அதிரடி உத்தரவு

the-special-courts-to-investigate-cases-related-to-mineral-resources-madurai-hc

கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தல் வழக்குகளில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

Related image

குறிப்பாக கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே 30 நாட்களுக்குள்ளாக கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கும்" என உத்தரவிட்டார். 

Image result for madurai hc

மேலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்த பல்வேறு மனுதாரர்களுக்கும் 5 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை அபராதம் விதித்து, அதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் செலுத்தவும், அந்தத் தொகையை அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close